"மெரினா கடற்கரையை திறப்பதில் தாமதம் ஏன்?"- தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

மெரினா கடற்கரையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறப்பதில் தாமதம் ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
"மெரினா கடற்கரையை திறப்பதில் தாமதம் ஏன்?"- தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
Published on

மெரினாவில் மீன் கடைகளை முறைப்படுத்துவது தொடர்பாகவும், கடற்கரையை தூய்மைப்படுத்துவது தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ரமேஷ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், மெரினாவை சுத்தப்படுத்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக, தெரிவித்தார். இதையடுத்து, ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மெரினா கடற்கரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு எப்போது திறக்கப்படும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.அதற்கு, நவம்பர் இறுதி வரை திறக்க வாய்ப்பில்லை என்று அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இதையடுத்து, திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மெரினா கடற்கரையை திறப்பதில் தாமதம் ஏன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசு முடிவெடுக்காவிட்டால், நீதிமன்றம் உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com