திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மருதாநதி அணையின் நீர் மட்டம் கடந்த 3 நாட்களில் 2 அடி வரை உயர்ந்துள்ளது. அய்யம்பாளையம் அருகே அமைந்துள்ள மருதாநதி அணையின் மொத்தம் உயரம் 72 அடியாகும். வறட்சியின் காரணமாக அணையின் நீர்மட்டம் 22 அடி வரை குறைந்திருந்தது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் கொடைக்கானல், தாண்டிக்குடி, ஆடலூர் பன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது கன மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் மூன்று நாட்களில் 2 அடி வரை உயர்ந்துள்ளது. அணைக்கு தற்போது 10 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.