பிரசாரத்தின் போது மயங்கி விழுந்த மன்சூர் அலிகான்

திண்டுக்கல் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகானுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிரசாரத்தின் போது மயங்கி விழுந்த மன்சூர் அலிகான்
Published on
திண்டுக்கல் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகானுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அழகம்பட்டியில் பிரச்சாரம் செய்த நடிகர் மன்சூர் அலிகான் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவருடன் இருந்த கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உடனடியாக மன்சூர் அலிகானை நிலக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரசாரத்தின் போது மன்சூர் அலிகான் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
X

Thanthi TV
www.thanthitv.com