மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை இல்லாத காரணத்தினால் மஞ்சளார் அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் 50 அடியாகவும், நீர்வரத்து 37 கனஅடியாகவும் குறைந்துள்ளது, நீர் வெளியேற்றம் 80 கன அடியாகவும், நீர் இருப்பு 346 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.