49 பிரபலங்கள் மீது தேச துரோக வழக்கை திரும்ப பெற பீகார் காவல்துறை முடிவு

இயக்குனர் மணிரத்தினம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது பதிவு செய்யப்பட்ட தேச துரோக வழக்கை திரும்ப பெற பீகார் காவல்துறை முடிவு செய்துள்ளது.
49 பிரபலங்கள் மீது தேச துரோக வழக்கை திரும்ப பெற பீகார் காவல்துறை முடிவு
Published on

வட மாநிலங்களில் மதரீதியான தாக்குதல் அதிகரித்துள்ளதாகவும் அதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க கோரியும் 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். இது நாட்டின் ஒற்றுமையை களங்கப்படுத்துவதாக கூறி முசாபர் நகரை சேர்ந்த சுதிர்குமார் என்ற வழக்கறிஞர், பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி மணிரத்தினம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தேச துரோக வழக்கை திரும்ப பெற பீஹார் காவல்துறை முடிவு செய்துள்ளது. மேலும் தவறான புகார் அளித்ததாக சுதிர்குமார் மீது பீகார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com