Leopard | பல உயிர்களை காவு வாங்கிய ஆட்கொல்லி சிறுத்தை சிக்கியது
பல உயிர்களை காவு வாங்கிய ஆட்கொல்லி சிறுத்தை சிக்கியது
Leopard | பல உயிர்களை காவு வாங்கிய ஆட்கொல்லி சிறுத்தை சிக்கியது
#erode #Leopard #thanthitv
ஈரோடு மாவட்டம், ஆசனூர் மலைப்பகுதியில் வனத்துறையினர் வைத்த கூண்டில் ஆட்கொல்லி சிறுத்தை சிக்கியது. இதனால் மலைக்கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர் வனச்சரகத்தில் இருந்து வெளியேறிய சிறுத்தை, பல்வேறு மலைக்கிராமங்களில் பத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளைக் கொன்றதுடன், கூலித் தொழிலாளி பெரியசாமியையும் தாக்கிக் கொன்றது. இதையடுத்து, வனத்துறையினர் தானியங்கி கேமராக்கள் பொருத்தி கூண்டு வைத்தனர். இதில் இன்று அதிகாலை சிறுத்தை சிக்கியது. சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கைகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
