குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

மணப்பாறை அருகே உள்ள இரட்டியபட்டி கிராமத்திற்கு கடந்த ஓரு மாதமாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
Published on

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள இரட்டியபட்டி கிராமத்திற்கு கடந்த ஓரு மாதமாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து தொட்டியபட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் குடிநீர் வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்று ஊராட்சி அதிகாரிகள் குடிநீர் வழங்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தபின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் :

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அருகே, உள்ள நெல்லிக்குப்பம் கிராமத்தில், முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இப்பகுதியில், 500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் இராணிப்பேட்டை- பொன்னை சாலையை திடீரென மறித்தனர்.இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பிற்குள்ளானது. பின்னர், குடிநீர் விநியோகம் செய்யப்படும் என, ராணிப்பேட்டை போலீசார் உறுதி அளித்தன் பேரில், மறியல் கைவிடப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com