5 டேங்கர் லாரி தண்ணீரை தினமும் ஊருக்கு தானமாக வழங்கும் விவசாயி

மணப்பாறை அருகே, தினமும் 5 டேங்கர் லாரி தண்ணீரை கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கி வரும் விவசாயியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், கன்னிராஜாப்பட்டியை சேர்ந்தவர் அருணாச்சலம், விவசாயத்திற்காக போடப்பட போரில் இருந்து கிடைக்கும் தண்ணீரை, கிணற்றில் சேமிக்கிறார். பின்னர் அந்த நீரை டேங்கர் லாரியில் ஏற்றி அதனை தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிக்கு சென்று வினியோகம் செய்கிறார் அருணாச்சலம். கிராம மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்வதற்காகவே, டேங்கர் லாரியை சொந்தமாக வாங்கியுள்ள அருணாச்சலம், தினமும் 5 லாரி தண்ணீரை இலவசமாக பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வருகிறார். தேவையானவர்களுக்கு இலவசமாக தண்ணீர் வழங்கி வருவதை பெரும் பாக்கியமாக கருதுவதாகவும் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com