அரசு பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்

அரசு பள்ளிக்கு அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சீர்வரிசை பொருட்களை தாரைதப்பட்டையுடன் ஊர்வலமாக கொண்டு வந்து வழங்கினர்.
அரசு பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்
Published on

மணப்பாறை அருகே உள்ள அரசு பள்ளிக்கு அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சீர்வரிசை பொருட்களை தாரைதப்பட்டையுடன் ஊர்வலமாக கொண்டு வந்து வழங்கினர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஊனையூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் அடிப்படை பொருட்கள் இல்லாமல் மாணவர்கள் சிரமம்மப்பட்டு வந்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் பள்ளிக்கு தேவையான பொருட்களை வழங்கிட முடிவு செய்தனர். அதன்படி நாற்காலி, கம்ப்யூட்டர், விளையாட்டுப் பொருட்கள், நோட்டு புத்தகங்கள் ஆகியவற்றை சீர்வரிசையாக தாரை தப்பட்டைகளுடன் கொண்டு வந்து வழங்கினர்.

X

Thanthi TV
www.thanthitv.com