மனமகிழ் மன்ற விவகாரம்... கமிஷனரை வழக்கில் சேர்த்து... கோர்ட் அதிரடி உத்தரவு

x

திருச்சியைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் "திருச்சி ஸ்ரீரங்கம் திருவானைக்காவல், வெள்ளித்திருமுத்தம் பகுதியில் அமைந்துள்ள மனமகிழ் மன்றத்தால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே மனமகிழ் மன்றம் செயல்பட தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் "திருச்சி மாநகர காவல் ஆணையரை வழக்கில் நீதிமன்றம் தாமாக முன்வந்து சேர்த்தும், சம்மந்தப்பட்ட மனமகிழ் மன்றத்தை நேரில் ஆய்வு செய்து, அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஜூலை 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்