Manamadurai | Turmeric Water | 158 ஆண்டு பாரம்பரியம்! மானாமதுரை மஞ்சள் நீராட்டு விழா கோலாகலம்
158 ஆண்டு பாரம்பரியம்! மானாமதுரை மஞ்சள் நீராட்டு விழா கோலாகலம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கன்னார் தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் 158வது ஆண்டு மஞ்சள் நீராட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. மாமன்–மச்சான் உறவுமுறையை வலுப்படுத்தும் இந்த பாரம்பரிய விழாவில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
