Micset | விசித்திர போட்டி.. ஆண்டிப்பட்டியில் `தமிழ்நாடே’ மையமிட்டு சம்பவம்
குழாய் ஒலிபெருக்கியில் பாடல்களை இசைத்து அசத்தல் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் ஆண்டுதோறும் நடைபெறும் மைக்செட் போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆண்டிப்பட்டி அருகே உள்ள சோலைதேவன்பட்டி என்ற கிராமத்தின் மலையடிவாரத்தில் கூம்பு வடிவ குழாய் ஒலிபெருக்கிகளுக்கான பிரம்மாண்ட இசை போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மைக் செட் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். நாக்-அவுட் முறையில் நடந்த இந்த போட்டிகளில், மைக் செட் அமைப்பாளர்கள் பக்திப் பாடல்கள் மற்றும் சினிமா பாடல்களை ஒலிக்கச் செய்தனர். இந்த ஒலிபெருக்கிகளில் இருந்து வெளிவரும் ஒலியின் தெளிவு மற்றும் துல்லிய தன்மையை 200 மீட்டர் தொலைவில் அமர்ந்திருந்த நடுவர்கள் கவனித்து, வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். வெற்றி பெற்ற மைக் செட் அமைப்பாளர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
