ஆன்லைன் ரம்மியில் ரூ15 லட்சத்தை இழந்தவர் தற்கொலை

ஆன்லைன் ரம்மியில் ரூ15 லட்சத்தை இழந்தவர் தற்கொலை
Published on

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று அலுவலகம் சென்றவர், உடனடியாக வீட்டிற்கு திரும்பி இருக்கிறார். குடும்பத்தினர் வெளியூர் சென்ற நிலையில் மகன் மற்றும் மகளுக்கு இது தான் எனது கடைசி நாள் என மெசேஜ் அனுப்பி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் சென்று பார்த்த போது வீட்டில் கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையான கிருஷ்ணமூர்த்தி பலரிடம் கடன் பெற்று சுமார் ரூ 15 லட்சம் வரை இழந்தது தெரியவந்துள்ளது. இதனால் கடும் மன உளைச்சலிலிருந்த கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com