தண்டவாளத்தில் சிக்கிய நபர் - 2 கால்களும் துண்டான நிலையில் உயிரிழப்பு
திருவாரூர் முத்துப்பேட்டையில் ரயில் தண்டவாளத்தில் சிக்கிய இளைஞரின் 2 கால்களும் துண்டான நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை மரவாக்காடு கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சுரேஷ். இவர், அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென பட்டுக்கோட்டையில் to திருத்துறைப்பூண்டி டெமு ரயில் வந்ததால் அதிர்ச்சியில் தடுமாறி கீழே விழுந்ததாக தெரிகிறது. அப்போது அவர் மீது ரயில் ஏறியதில் அவரது 2 கால்களும் துண்டாகின. உயிருக்கு போராடிய அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பாதி வழியிலேயே அவர், பரிதாபமாக உயிரிழந்தார்.
Next Story
