Tenkasi | டாஸ்மாக் முன் பஸ்ஸை நிறுத்தி பாட்டில் வாங்கிய நபர் - தீயாய் பரவும் பகீர் வீடியோ

டாஸ்மாக் முன் பஸ்ஸை நிறுத்தி பாட்டில் வாங்கிய நபர் - தீயாய் பரவும் பகீர் வீடியோ

Tenkasi | டாஸ்மாக் முன் பஸ்ஸை நிறுத்தி பாட்டில் வாங்கிய நபர் - தீயாய் பரவும் பகீர் வீடியோ #tenkasi #viralvideo #thanthitv தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து டாஸ்மாக் கடை முன்பு நிறுத்தப்பட்டு மது பாட்டில் வாங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கரன்கோவிலில் இருந்து கோவில்பட்டி நோக்கிச் சென்ற TN 72 N 2826 என்ற பதிவு எண் கொண்ட பேருந்து, தற்காலிக பேருந்து நிலையம் எதிரே உள்ள மதுபானக் கடை முன்பு நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது கடைக்குள் இருந்து ஒருவர் மது பாட்டிலைக் கொண்டு வந்து பேருந்தில் இருந்தவரிடம் கொடுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும், நடத்துநருக்கு மது பாட்டில் கொடுத்ததாக அந்த நபர் கூறும் வீடியோவும் வைரலாகி வருகிறது. ஓட்டுநருக்காகவா? நடத்துநருக்காகவா மது வாங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X