சேலத்தில் பைக் திருடன் பிடிக்க முயன்றவருக்கு கத்திக்குத்து - அதிர்ச்சி காட்சி

Man stabbed while trying to catch a bike thief in Salem – Shocking visuals.

செங்கல்பேட்டை பகுதியைச் சேர்ந்த செல்வ விக்னேஷின் இருசக்கர வாகனம் கடந்த 25-ம் தேதி வீட்டின் முன்பு திருடுபோனது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், பச்சை நிற டி-ஷர்ட் அணிந்த நபர் பைக்கை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, நண்பர்களுடன் சேர்ந்து நேற்று இரவு அப்பகுதியில் கண்காணித்தபோது, அதே நபர் வந்ததாக கூறப்படுகிறது. அவரை பிடித்து விசாரித்தபோது, கத்தியை எடுத்து தாக்க முயன்றதில், செல்வ விக்னேஷின் இடுப்பு மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. கை நரம்பு துண்டான நிலையில், அவர் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#salem #thief #bike #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com