ஆன்லைன் ரம்மியால் வீடு, நகைகளை இழந்த நபர் விபரீத முடிவு
ஆன்லைன் ரம்மியால் வீடு, நகையை இழந்த நபர் விபரீத முடிவு
சேலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக வெளியாகியுள்ள தகவல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தளவாய்பட்டி பகுதியை சேர்ந்த 33 வயதான சதீஷ்குமார், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் இழந்ததாக கூறப்படுகிறது.
வீட்டை விற்றது மட்டுமின்றி நகைகளை அடமானம் வைத்து கடனை கட்டி வந்த சதீஷ்குமார், வட்டி மீது வட்டி என கடன் ஏறிக்கொண்டே சென்றதால் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
சதீஷ்குமார் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்,.
Next Story
