விழுப்புரத்தில் சிறுத்தை தாக்கி ஒருவர் பலியா? - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
விழுப்புரம் அருகே சிறுத்தை தாக்கியதால் ஒருவர் பலியானதாகப் பரவும் செய்தி வதந்தி என்று வனத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் அளித்துள்ள விளக்கத்தில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் சிறுத்தை உலா வருவதாக வந்த செய்தியின் அடிப்படையில்ஃன, மாவட்ட வனத்துறையினர் கூண்டு வைத்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டதில் சிறுத்தை உலாவுவதாக வந்தச் செய்தி வதந்தி என்று தெரியவந்ததுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், சிறுத்தையால் கிராமத்தில் மனிதர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை' என்று மாவட்ட வனத்துறை தெரிவித்துள்ளது.
Next Story
