Love Issue| வீட்டு வாசலில் மனைவி, மகள் கண்முன்னே துடிக்க துடிக்க வெட்டி கொலை - சிறுவன் கைது
வீட்டு வாசலில் மனைவி, மகள் கண்முன்னே துடிக்க துடிக்க வெட்டி கொலை - சிறுவன் கைது
#loveissue #tiruttaniissue
திருத்தணியில் பெட்டிக்கடை உரிமையாளர் மனைவி மற்றும் மகள் கண் முன்னே வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த யுவராஜை, அவரது மனைவி மற்றும் மகள் கண் முன்னே, வீட்டு வாசலில் வைத்தே வெட்டிக் கொன்ற இரு இளைஞர்கள், இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இந்நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிளஸ் 2 படித்து வரும் யுவராஜின் இளைய மகளை, பெரியார் நகரைச் சேர்ந்த இம்மானுவேல் காதலிப்பதாகக் கூறியுள்ளார். இதை ஏற்காத யுவராஜின் மகள், வேறொருவருடன் பேசி பழகி வந்துள்ளார். இதனை விரும்பாத இம்மானுவேல், தனது குடும்பத்தினருடன் சென்று, யுவராஜின் மகள் பழகி வந்த அந்த இளைஞரை அடித்து உதைத்துள்ளனர். இனி அந்தப் பெண்ணுடன் பேசவோ, பழகவோ கூடாது எனவும் மிரட்டியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, அன்று மாலையே டியூஷனுக்குச் சென்ற யுவராஜின் மகளையும் மிரட்டியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக யுவராஜின் மனைவி, திருத்தணி காவல் நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி புகார் செய்துள்ளார். இதனை அடுத்து, இம்மானுவேலின் சகோதரர் லாரன்ஸ் என்பவரை போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது. அதேசமயம், மகளை மிரட்டியதாக கொடுத்த புகார் மீது போலீசார் அலட்சியம் காட்டியதால் கொலை சம்பவம் நடைபெற்றுள்ளதாக யுவராஜின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இதனிடையே, சுங்குவார்சத்திரத்தில் பதுங்கியிருந்த சுசீல், ஹரிஷ், புவனேஷ் மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.
