அந்தரத்தில் பறந்து பைக்குடன் குழிக்குள் விழுந்த நபர் - அதிர்ச்சி சிசிடிவி
வேடசந்தூர் அருகே ரயில்வே சுரங்கப்பாதைக்கு தோண்டிய பள்ளத்தில் பைக் விழுந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் தங்கச்சியம்மாபட்டியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது வரை பணி நிறைவடையாமல் உள்ளதால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துடனே சென்று வந்தனர். இந்த நிலையில் அந்த வழியே பைக்கில் நத்தபட்டியை சேர்ந்த மதியழகன் என்பவர் சென்றபோது எதிர்பாராத விதமாக மண் குவியல் மேட்டின் மீது ஏறி குழிக்குள் விழுந்து படுகாயம் அடைந்தார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது .
Next Story
