திருச்செந்தூர் கடலில் மூழ்கிய நபர் - கடவுளாய் வந்து மீட்ட பாதுகாப்பு பணியாளர்கள்

x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். இந்நிலையில் சேலத்தை சேர்ந்த சந்திரன் என்பவர் சாமி தரிசனம் செய்து விட்டு கடலில் நீராட சென்ற போது அலையில் சிக்கி மூழ்கியுள்ளார். இதனையடுத்து உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் கடலில் சிக்கிய சந்திரனை கடலோர பாதுகாப்பு பணியாளர்கள் மீட்டு முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்