சம்மனை போலீஸ் கையில் கொடுத்ததும் அதிர்ச்சியில் பலியான நபர் - களமிறங்கிய RDO

சென்னை அபிராமபுரத்தில் நிலமோசடி வழக்கில் போலீசார் சம்மன் வழங்கி வலுக்கட்டாயமாக விசாரணைக்கு அழைத்தபோது, கார்த்திகேயன் என்பவர் உயிரிழந்த சம்பவத்தில் ஆர்டிஓ விசாரணை நடத்தியுள்ளார். ஐஸ் கம்பெனி வைத்திருந்த கார்த்திகேயன், நில விற்பனையில் 26 லட்ச ரூபாய் முன்பணம் பெற்று ஏமாற்றியதாக, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு அழைத்தபோது அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தில், கிண்டி வருவாய் கோட்டாட்சியர் ரங்கராஜன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு, உயிரிழந்த கார்த்திகேயனின் உடலை ஆய்வு செய்தார். பின்னர், பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com