தாம்பரத்தில் சிக்கன் சமைத்து சாப்பிட்டவர் மரணம்
சென்னை தாம்பரத்தில், சிக்கன் சமைத்து சாப்பிட்ட மேற்குவங்க தொழிலாளி, கடும் வயிற்றுவலியால் உயிரிழந்தார்.
தாம்பரம் அடுத்த வெங்கம்பாக்கத்தில் கட்டிட தொழிலாளிகள் நான்குபேர் சிக்கன் சமைத்து சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்டுவிட்டு தூங்கியபோது மேற்குவங்கத்தை சேர்ந்த ஐதர் சக், அலிஉஷேன் இருவரும் வயிற்றுவலியால் துடித்துள்ளனர். இதையடுத்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், மருத்துவமனை செல்லும் வழியிலேயே ஐதர் சக் உயிரிழந்துள்ளார். அலிஉஷேனுக்கு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story
