மதுபோதையில் விளம்பர பலகை மீது ஏறி தற்கொலை மிரட்டல்

மதுபோதையில் விளம்பர பலகை மீது ஏறி தற்கொலை மிரட்டல்

சென்னை திருவான்மியூரில் மது போதையில் விளம்பர பலகை மீது ஏறிய 50 வயது தனசேகர், கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், சுமார் 2 மணி நேரம் போராடி ‘ஸ்கை லிப்ட்“ மூலம் அவரை பத்திரமாக மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தனசேகரை அனுப்பி வைத்து, போலீசார் விசாரணை நடத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com