செல்போன் கோபுரம் மீது ஏறி ஒருவர் தற்கொலை முயற்சி

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ரோடு மணல்மேடு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செல்போன் கோபுரம் மீது ஏறி ஒருவர் தற்கொலை முயற்சி
Published on
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ரோடு மணல்மேடு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பழ வியாபாரியான இவர் மாணிக்கம்பாளையத்தில் தனது உறவினர் வீட்டுக்கு வந்த நிலையில், குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து மது அருந்திவிட்டு வந்த செல்வராஜ், அருகிலிருந்த 250 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். அதனால் அதிர்ச்சியடைந்த அவரது மகள் மற்றும் உறவினர்கள் 3 பேர், அவரை மீட்பதற்காக செல்போன் கோபுரத்தில் ஏறியுள்ளனர். ஆனால் அவர்களும் செல்போன் கோபுரத்தின் பாதி வழியிலேயே நின்றதைத் தொடர்ந்து, அருகில் வசிப்பவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் செல்போன் கோபுரத்தில் ஏறியவர்களை 2 மணி போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com