சந்தன மரத்தை வெட்டி கடத்த முயற்சி - தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

ஈரோடு மாவட்டம் கவுந்தபாடி அருகே ரங்கன்காட்டூரில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்றவரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
சந்தன மரத்தை வெட்டி கடத்த முயற்சி - தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்
Published on
ஈரோடு மாவட்டம் கவுந்தபாடி அருகே ரங்கன்காட்டூரில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்றவரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். ஓய்வு பெற்ற ஐ.எஃப்.எஸ் அதிகாரியான பாரதி மற்றும் அருண்குமார், பரதன் ஆகியோருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்துக்குள் இரவில் புகுந்த மர்ம நபர்கள் 3 பேர் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்றுள்ளனர். இதனை கண்ட பரதன், அரவிந்தன் ஆகியோர் அவர்களை மடக்கி பிடிக்க முயற்சித்துள்ளனர். 2 பேர் தப்பிசென்ற நிலையில், கார்த்தி என்ற ஒருவர் மட்டும் சிக்கியுள்ளார். அவரை பிடித்து தர்ம அடி கொடுத்த அப்பகுதி மக்கள், கவுந்தபாடி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com