

ஈரோடு மாவட்டம் வள்ளுவர் தெருவை சேர்ந்த பூ வியாபாரியான சேக் முகமது யூசுப் மற்றும் அவரது மனைவி ரபியா ஆகிய இருவருக்கு இடையே குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளனர். அப்போது சற்றும் எதிர்பாரத விதமாக காவல் நிலையம் முன்பு, பூச்சிக் கொல்லி விஷம் மருந்தை உட்கொண்ட யூசுப் மயக்கமடைந்தார். இதனையடுத்து அவரை போலீசார் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால் காவல் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.