ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற நபர்

x

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய்மாமன் புதிதாக வாங்கியுள்ள இடத்தில் தனக்கும் பங்கு வேண்டும் எனக் கூறி தின்னரை தனது உடலில் ஊற்றிக் கொண்ட நபரை மீட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் தற்கொலைக்கு முயன்ற சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த பாலகணேஷ் என்கிற அஸரத்துக்கும், அவரது தாய்மாமன் முருகன் வாங்கியுள்ள இடத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்