அண்ணனை அரிவாளால் வெட்டியவர் கைது

x

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே நிலப்பிரச்சினையில் அண்ணனை அரிவாளால் வெட்டிய முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். நிலத்தை சர்வே செய்வதற்காக குல்லலக்குண்டு வி.ஏ.ஓ. கணேசன் மற்றும் வருவாய் துறையினர் வந்துள்ளனர்.. இதைபார்த்து ஆத்திரம் அடைந்த முன்னாள் ராணுவ வீரர், தனது அண்ணனுடன் வாக்குவாதம் செய்ததோடு, மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியுள்ளார்.இதில் காயம் அடைந்த விவசாயி பொன்னையா, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அம்மையநாயக்கனூர் போலீசார், கைதானவரிடம் விசாரணை நடத்துகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்