Youtube பார்த்து `தில்லுமுல்லு' செய்த இளைஞர் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்
பண்ருட்டி அருகே டாஸ்மாக் கடையில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட இளைஞர் சிறைபிடிக்கப்பட்டு, காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள ஆண்டிக்குப்பம் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மதுபானம் வாங்க வந்த சிவசங்கரன் என்ற இளைஞர், அடுத்தடுத்து, 500 ரூபாய் நோட்டுகளை தந்து, மதுபானம் வாங்கியுள்ளார். சந்தேகம் அடைந்து, 500 ரூபாய் நோட்டை பரிசோதித்ததில் அது கள்ள நோட்டு என தெரியவந்தது. உடனடியாக அவரை சிறைபிடித்து, காவல்நி்லையத்தில் ஒப்படைத்த நிலையில், அவர் யூடியூப் பார்த்து கள்ள நோட்டை தயாரித்தது தெரியவந்தது. தற்போது அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Next Story
