மான் வேட்டையாடிய ஒருவர் கைது - இறைச்சி பறிமுதல்

x

தேனி மாவட்டம் கூடலூர் அருகே, மான் வேட்டையில் ஈடுபட்டவரை கைது செய்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். கம்பம் மேற்கு வனச்சரகத்திற்குட்பட்ட சுரங்கனார் காப்புக்காடு பகுதியில், வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடமானை வேட்டையாடிய ராஜபிரபு என்பவரை பிடித்த வனத்துறையினர் அவரிடம் இருந்த மான் இறைச்சியை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்