செங்கம் வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு மற்றும் கள்ள துப்பாக்கியுடன் சுற்றிதிரிந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். செங்கம் பகுதியை ஒட்டி ஏராளமான தரைக்காடுகள் உள்ளது. இந்த காட்டில் அரியவகை மான் மற்றும் விலங்குகள் உள்ளதால், சில சமூக விரோதிகள் இந்த விலங்குகளை வேட்டையாடி வெளி மாநிலங்களுக்கு அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இந்நிலையில் விஜயகுமார் என்ற நபர் கையில் துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிகுண்டுடன் வேட்டையாட சுற்றித்திரிந்துள்ளார். வனத்துறையினரை கண்டதும் தப்பியோட முயன்ற அவரை சுற்றிவளைத்து கைது வனத்துறையினர் செய்தனர்.