போலி ஆவணம் கொடுத்து அமெரிக்க விசா பெற முயன்றவர் கைது
டெல்லி, ஹைதராபாத்தில் 9 முறை.. 10 வது முறையாக சென்னை.. அமெரிக்க தூதரகத்தில் பரபரப்பு
சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் போலி ஆவணம் சமர்பித்து, மாணவர் விசா பெற முயன்றவரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானாவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் அன்கட்டி என்பவர், மாணவர் விசா பெற, டெல்லி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் ஒன்பது முறை விண்ணப்பித்தும் கிடைக்காத நிலையில், பத்தாவது முறையாக சென்னை அமெரிக்க தூதரகத்தில் விண்ணப்பித்துள்ளார். அவருடைய ஆவணங்கள் போலியானவை என்று கண்டறியப்பட்டதை அடுத்து, அமெரிக்க துணை தூதரக அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், ஸ்ரீகாந்த் அங்கட்டியை போலீசார் கைது செய்தனர்.
Next Story
