மரத்தில் ஏறி அட்ராசிட்டி செய்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட நபர், மரத்தின் மீது ஏறி அட்டகாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் அவரை பத்திரமாக மீட்டனர். கோவில்பட்டியில் மயங்கி கிடந்த விருதுநகரை சேர்ந்த பழனிச்சாமி என்பவரை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் இரவில், மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அவர், திடீரென மரத்தின் மீது ஏறியுள்ளார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், குடும்ப பிரச்சனையால் மனைவி வீட்டை விட்டு அனுப்பிய விரக்தியில் அவர் கோவில்பட்டிக்கு நடந்தே வந்ததாகவும், உணவு உட்கொள்ளாததால் மயக்க நிலைக்கு சென்றதாகவும் தெரிவித்தனர்.
Next Story
