மம்தாவுக்கு இடியை இறக்கிய கொல்கத்தா ஐகோர்ட் தீர்ப்பு

கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பை தலைவணங்கி வரவேற்பதாக, மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநில ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஒருவர், ஆளுநர் சிவி போஸ் மீது பாலியல் புகார் அளித்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆலோசனை கூட்டம் ஒன்றில் பேசிய முதல்வர் மம்தா பேனர்ஜி, அண்மைக்கால நிகழ்வுகளால், பெண்கள் ஆளுநர் மாளிகைக்குச் செல்லவே பயப்படுவதாக தெரிவித்தார். இதற்கு எதிராக ஆளுநர் ஆனந்தபோஸ் கொல்கத்தா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை, ஆளுநர் ஆனந்த போஸ் குறித்து, அவதூறான மற்றும் ஆதாரமற்ற கருத்துகளை தெரிவிக்கக் கூடாது என உத்தரவிட்டது. இந்த உத்தரவை தலை வணங்கி வரவேற்பதாக ஆளுநர் ஆனந்த போஸ் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com