உணவகம், விடுதிகளில் முறைகேடு கண்டுபிடிப்பு - 23 குடிநீர் இணைப்புகளை துண்டித்த அதிகாரிகள்

திருச்செந்தூரில் தனியார் உணவகம் மற்றும் விடுதிகளில் முறைகேடாக பயன்படுத்தி வந்த குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்துள்ளனர்.
உணவகம், விடுதிகளில் முறைகேடு கண்டுபிடிப்பு - 23 குடிநீர் இணைப்புகளை துண்டித்த அதிகாரிகள்
Published on

திருச்செந்தூரில் தனியார் உணவகம் மற்றும் விடுதிகளில் முறைகேடாக பயன்படுத்தி வந்த குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்துள்ளனர். பொதுமக்களிடம் இருந்து தொடர்ச்சியாக புகார்கள் வந்த நிலையில், பேரூராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆத்தூரிலிருந்து திருச்செந்தூருக்கு வரும் குடிநீர் குழாயில் இருந்து முறைகேடான முறையில், தனியார் விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு 23 குடிநீர் இணைப்புகள் செல்வதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து, அவற்றை உடனடியாக துண்டித்த அதிகாரிகள், விடுதி மற்றும் உணவகங்களின் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர். தற்போது தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இதுபோன்று குடிநீரை திருடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com