வைகோவை கடுமையாக விமர்சித்த மல்லை சத்யா
32 ஆண்டுகளாக தங்கள் உழைப்பை உறிஞ்சி, தூக்கி எறிய துடிக்கும் மதிமுக பொது செயலாளர் வைகோவின் பூர்ஷ்வா அரசியலை நாடு பார்ப்பதாக மல்லை சத்யா தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எப்போது பழியை சுமத்தினீர்களோ, அப்போதே சுயமரியாதைக்காரனாக மதிமுக கட்சி வேட்டி மற்றும் காரில் இருந்த கட்சி கொடியை அகற்றி விட்டதாக கூறினார். குறைகள், தவறுகளை சுட்டிக் காட்டக்கூடாது என்பது பாசிசத்தின் உச்சம் என்றும், தலைவன் தொண்டன் மீது நம்பிக்கை வைக்காமல் போனதே மதிமுகவின் இன்றைய நிலைமைக்கு காரணம் என்றும் கூறினார்.
Next Story
