பவானிசாகர் வனத்துறையினர் தெங்குமரஹடா வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் ஆண் புலி ஒன்று இறந்து கிடந்ததை கண்டனர். இதனையடுத்து புலியின் உடலை உடற்கூறு ஆய்வு செய்த வனத்துறை கால்நடை மருத்துவர்கள், இரண்டு புலிகளுக்கிடையில் இடையே நடைபெற்ற சண்டையில் ஆண் புலி இறந்ததாக தெரிவித்தனர். இறந்த புலியின் உடலில் இருந்து நகங்கள், பற்கள் அகற்றப்பட்டு பின்னர் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது.