காண்டூர் கால்வாயில் விழுந்து ஆண் யானை உயிரிழப்பு

காண்டூர் கால்வாயில் விழுந்து ஆண் யானை உயிரிழப்பு
Summary

திருப்பூர் மாவட்டம் உடுமலை காண்டூர் கால்வாயில் தவறி விழுந்து ஆண் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது

பொள்ளாச்சி வனச்சரகம் அருகே கால்வாயில் விழுந்த யானையின் உடல், பலத்த நீரோட்டத்தால் திருமூர்த்தி அணைப் பகுதிக்கு அடித்து வரப்பட்ட நிலையில், அதனைப் பார்த்த விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். உயிரிழந்த நிலையில் மிதந்து வந்த யானையின் உடலை, திருமூர்த்தி அணைப் பகுதியில் கயிறு கட்டி வனத்துறையினர் மீட்டனர். யானையின் இறப்பிற்கான காரணம் குறித்து உடுமலை வனத்துறையினர் பிரேதப் பரிசோதனை செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com