கோவையை பரபரப்பாக்கிய ஆண் சடலம் - மாவட்ட காவல் ஆணையர் சொன்ன தகவல்
கோவையில் ஆண் சடலம் மீட்கபட்ட விவகாரத்தில், நான்கு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக, மாவட்ட காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில், போக்குவரத்து காவலர்களுக்கு குளிரூட்டப்பட் தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் ஆணையர் சரவண சுந்தர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெள்ளலூரில் ஆண் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில, ஆய்வு முடிவுகள் வந்தவுடன் உண்மை தெரியவரும் எனக் கூறிய அவர், இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்
Next Story
