கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை - அரசு ஊக்கத் தொகை வழங்க கோரிக்கை

மலேசியாவில் நடந்த கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஆகாஷ் என்ற மாணவர், தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை - அரசு ஊக்கத் தொகை வழங்க கோரிக்கை
Published on

மலேசியாவில் நடந்த கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஆகாஷ் என்ற மாணவர், தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அங்குள்ள கீழ மணக்குடி கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் - ஜென்சி தம்பதியினரின் மகன் ஆகாஷ், தனியார் பள்ளியில் 5 வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மலேஷியாவில் நடைபெற்ற 16வது இண்டர்நேஷனல் கராத்தே ஒபன் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்று நாடு திரும்பியுள்ளார். இந்நிலையில், கன்னியாகுமரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆகாஷ் மத்திய மாநில அரசுகள் ஊக்கத் தொகை அளித்தால் தனக்கு உதவிகரமாக இருக்கும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com