மலேசியாவில் நடைபெற்ற கராத்தே போட்டி : தங்கம் வென்ற தமிழக மாணவனுக்கு உற்சாக வரவேற்பு

மலேசியாவில் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாணவன் சக்ஷ்டிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
மலேசியாவில் நடைபெற்ற கராத்தே போட்டி : தங்கம் வென்ற தமிழக மாணவனுக்கு உற்சாக வரவேற்பு
Published on

மலேசியாவில் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாணவன் சக்ஷ்டிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். ஹயாக்ஷிகா கராத்தே அமைப்பின் சார்பில் மலேசிய தலைநகரான கோலாம்பூரில் இந்தியா மற்றும் மலேசிய நாட்டின் வீரர்களுக்கிடையே கராத்தே போட்டிகள் நடைபெற்றன. இதில் 14 முதல் 15 வயது வரையிலான பிளாக் பெல்ட் குமிட்டே பிரிவில், திருப்பூரை சேர்ந்த சக்ஷ்டி வென்றுள்ளார். அவருக்கு இன்று திருப்பூரில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com