மலபார் கோல்ட், டைமண்ட்ஸ் ஷோரூம் லாஸ் ஏஞ்சல்ஸில் திறப்பு

மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் திறக்கப்பட்டுள்ளது.

இதனை, கலிபோர்னியாவுக்கான காங்கிரஸ் பிரதிநிதி Michelle Steel திறந்து வைத்தார். இந்நிகழ்வில், மலபார் குழும தலைவர் எம்.பி. அகமது, துணைத்தலைவர் அப்துல் சலாம், சர்வதேச செயல்பாடுகளின் நிர்வாக இயக்குநர் ஷாம்லால் அஹமத் உட்பட மூத்த இயக்குநர்கள் பங்கேற்றனர். இந்த மைல்கல், வட அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைக் குறிப்பதாகவும், அமெரிக்காவில் மிகப்பெரியது மட்டுமின்றி, 5வது ஷோரூம் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் 6வது ஷோரூம் விரைவில் திறக்கப்பட உள்ளதாக மலபார் குழும தலைவர் எம்.பி. அகமது தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com