'மதராஸி' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

x

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள 'மதராஸி' திரைப்படம் அடுத்தமாதம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படம் கஜினி படம் போன்ற திரை கதையையும் துப்பாக்கி படத்தின் ஆக்சனையும் சேர்த்து கதைக்களமாக கொண்டு படமாக்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குனர் ஏ.ஆர். முருதாஸ் கூறியிருந்தார். இதனால் இந்த படம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சில வாரங்களுக்கு முன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான சலமபல பாடல் வெளியாகி வைரலானது.இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்