பண்ருட்டி அருகே நாட்டு வெடி கடையில் பயங்கர தீ விபத்து – 7 பேர் படுகாயம்
பண்ருட்டி அருகே நாட்டு வெடி கடையில் பயங்கர தீ விபத்து – 7 பேர் படுகாயம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முத்தாண்டிக்குப்பத்தில் நாட்டு வெடி தயாரித்து விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், இரண்டு பெண்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.
தீ விபத்தைத் தொடர்ந்து நாட்டு வெடிகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது...
நாட்டு வெடி வாங்க வந்தவர்கள் உட்பட காயமடைந்தவர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்...
விபத்து குறித்து தீயணைப்புத் துறையினரும் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#cuddalore #accident #panruti #thanthitv
