OMR | Fire Accident | சோழிங்கநல்லூரில் பயங்கர தீ விபத்து – 2 வீடுகள் எரிந்து சேதம்
OMR | Fire Accident | சோழிங்கநல்லூரில் பயங்கர தீ விபத்து – 2 வீடுகள் எரிந்து சேதம்
#OMR #FireAccident #ViralVideo
சென்னை சோழிங்கநல்லூர் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள கிராம நெடுஞ்சாலை பகுதியில், அடுத்தடுத்து இரண்டு வீடுகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயன் என்பவரது மொட்டை மாடியில் இருந்த குடிசை வீட்டில் பற்றிய தீ, அருகில் ராஜி என்பவரது குடிசை வீட்டுக்கும் மளமளவென பரவியது. இதில் இரண்டு குடிசை வீடுகளும் முழுமையாக எரிந்து சேதமடைந்தன. தீ விபத்தின் போது குடிசையில் இருந்த சமையல் சிலிண்டர் வெடித்துள்ளது.. உடனே வீட்டில் இருந்தவர்கள் வெளியேறியுள்ளனர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், வீட்டின் கீழ் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் தீயில் கருகியதுடன், அருகிலிருந்த குடியிருப்பின் ஜன்னல் கண்ணாடிகளும் சேதமடைந்தன. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
