நெல்லையில் பயங்கர தீ விபத்து - தீக்கிரையாகிய பல லட்சம் மதிப்பிலான பொருள்கள்
நெல்லை ஸ்ரீபுரம் பகுதியில் அமைந்துள்ள கழிவறை டைல்ஸ் உள்ளிட்ட பொருட்கள் வைக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு 3-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த திருநெல்வேலி நகர் மற்றும் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த தீயணைப்புத்துறையினர், நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இருப்பினும், குடோனில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின. இதனிடையே, காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், அருகில் இருந்த குடோனும் தீப்பிடித்து எரிந்து சேதமானது. இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story