Chennai Puzhal | சென்னை புழலில் நடந்த மாற்றம்

சென்னை புழலில் நடந்த மாற்றம்

Chennai Puzhal | சென்னை புழலில் நடந்த மாற்றம்

சென்னை புழலில் பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரிசெய்யப்பட்டு, அதிகாலை முதல் மீண்டும் குடிநீர் விநியோகம் தொடங்கியது. புழல் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து ஜி.என்.டி சாலை வழியாக குடிநீரை கொண்டு செல்லும் 1200 மில்லிமீட்டர் விட்டமுள்ள பிரதான குழாயில் கடந்த 7-ம் தேதி உடைப்பு ஏற்பட்டது. இதனால் மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர் பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. சேதமடைந்த குழாயை அகற்றி, புதிய இரும்புக் குழாய் பொருத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, இன்று அதிகாலை 1 மணி முதல் சீரான குடிநீர் விநியோகம் தொடங்கியதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

#chennai #puzhal #drinkingwater #pipe #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com