எம்.பி., தேர்தலில் வாய்ப்பு அளிக்காதது வருத்தம் - மைத்ரேயன்

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காதது தமக்கு வருத்தம் அளிப்பதாக மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில், அதிமுக முன்னாள் எம்.பி., மைத்ரேயன் அஞ்சலி செலுத்தினார். மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நேற்றுடன் மைத்ரேயன் ஓய்வு பெற்ற நிலையில், அவர் ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காதது, தமக்கு வருத்தம் அளிப்பதாக, தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com