அண்ணா பல்கலை.,-ஐ அலறவிட்ட மெயில்-உள்ளே புகுந்த மோப்ப நாய்கள்-பரபரத்த சென்னை

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மின்னஞ்சலை கண்டு அதிர்ச்சி அடைந்த பல்கலைக்கழக நிர்வாகம், கோட்டூர்புரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மோப்ப நாயுடன் வந்த வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com